மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி பஞ்சாப் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்கவில்லை. டெல்லி ஹரியான மாநில எல்லையில் விவசாயிகளை நிறுத்திய போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகை, தடியடி ஆகியவற்றை தொடுத்தனர். ஆனால் நிலைமை தீவிரமடைந்த நிலையில், விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை நேற்று மாலை அனுமதி அளித்தது.
விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக டெல்லி கமிஷனர் தெரிவித்தார். அதன்பின் போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். டிராக்டர்களுடன் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்த விவசாயிகள், இன்று காலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.