புத்தகமாக வெளிவர இருக்கும் டிரம்ப் – கிம் ஜாங் உன் இருவரும் பரிமாறிகொண்ட 25 கடிதங்கள்!!!
இரு துருவங்களில் எதிரெதிர் நின்று அடிக்கடி மோதிக்கொள்ளும் வல்லரசு நாடுகளில் அமெரிக்காவும், வடகொரியாவும் முக்கியமானவை. அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரது வார்த்தைப் போர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிகரித்திருந்தது. பின், இருவரும் சந்தித்து அணு ஆயுதத்தடுப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். அதன் பின் இருநாடுகளுக்கும் இடையே மென்மையான உறவு தொடர்கிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு முன்னர் டிரம்புக்கு கிம் பெரும் தலைவலியாக இருந்தார். தற்போது சீன – அமெரிக்க போர் அதிகரித்துள்ளதால், சீன – வடகொரியப் போர் சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், டிரம்ப் – கிம் ஜாங் உன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எழுதிய, 25 கடிதங்கள் விரைவில் புத்தகமாக வெளிவரவுள்ளது. இதைத் தயாரிக்கும் பதிப்பக நிறுவனம் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.
மேலும், ‘கற்பனைகள் காவியத்தை ஒத்த, கற்பனைகள் மிகுந்த மாயாஜாலப் படம் போன்றது எங்கள் உறவு’ என, டிரம்ப் குறித்து கிம் கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ‘ரேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், கடந்த 2018ம் ஆண்டு முதல் அமெரிக்க – வடகொரிய வார்த்தைப்போர் குறித்து விவரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் டிரம்ப் – கிம் ஜாங் உன் ஆகியோர் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுவரை இந்த இருநாட்டு அதிபர்களும் மூன்று முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் வடகொரியா, அமெரிக்காவுடன் இணக்கமாகச் செல்லும்’ என, அரசியல் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.