சிறையில் இருந்து 400 தாலிபான் தீவிரவாதிகளை விடுவித்த ஆப்கானிஸ்தான் அரசு!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் அடிக்கடி பொது இடங்களில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு கைதாவது வழக்கம். மேலும், ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதியை தாலிபான்கள் ஆக்கிரமித்து அரசாட்சியே நடத்தி வருகின்றனர். ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் நடக்கும் போரில், அடிக்கடி பொதுமக்கள் பலியாகின்றனர். ஆப்கன் அரசுடன் இணைந்து அமெரிக்காவும் தாலிபான் தீவிரவாதத்தை ஒழிக்க முயன்று வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து 400 தாலிபான் கைதிகளை அரசு தற்போது விடுவித்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கனி கூறுகையில், ”தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த மக்களையும் அதிகளவில் தாக்கி கொன்றுள்ளனர். இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். விரைவில் தலிபான்களுடன் ஆப்கன் அரசு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சமாதான உடன்படிக்கையை எட்ட ஆப்கன் அரசு ஆவண செய்யும்,” என்றார்.

ஆப்கான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜாவித் கூறுகையில், ”நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே தீவிரவாதத்தை ஒடுக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியும். எனவே, பயங்கரவாத தலைவர்களுடன் அரசு நேரடியாக சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும். தற்போது, 400 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதால், தாலிபான்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்தாமல் சமாதானமாகச் செல்ல வாய்ப்புள்ளது. எனவேதான் அரசு இவர்களை விடுவித்துள்ளது,” எனக் கூறியுள்ளார். ஆனால், பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x