கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த புதுவையில் இன்று முழு ஊரடங்கு!!

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளர்வுகள் இல்லாத முழு லாக்டவுன் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அண்மையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு லாக்டவுன் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு இந்த முடிவை எடுத்தது.

இதனடிப்படையில் இன்று புதுச்சேரி முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் நாளை (புதன்கிழமை) காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழுபொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பால் பூத்கள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கடை, பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து மூடவும், மக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநில எல்லைக்குள் மருத்துவ தேவைகள் தவிர வேற எந்த வாகனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x