முதல்வரிடம் விருது பெற்ற தாசில்தார்… கொரோனா விதியை மீறியதால் அதிர்ச்சி

கொரோனா தடுப்புப் பணியை சிறப்பாக செய்ததற்காக விருது பெற்ற சென்னை குன்றத்தூர் தாசில்தார், அதனை கொண்டாட கொரோனா விதிகளை பின்பற்றாமல் நூறு பேரை கூட்டி கறி விருந்து படைத்தார்.
செங்கல்பட்டு புது மாவட்டமானதும் பல்லாவரத்தை இரண்டு தாலுகாவாக பிரித்து குன்றத்தூர் தாலுகா உருவாக்கப்பட்டது. அதன் முதல் தாசில்தார் தாசில்தார் ஜெயசித்ரா (52). இவர் கொரோனா தடுப்பு பணியை அப்பகுதியில் சிறப்பாக செய்ததாக சுதந்திர தினத்தின் போது முதல்வர் பதக்கம் பெற்றார்.
இதனை கொண்டாட அலுவலக தினமான நேற்று அவர் தாலுகாவில் பணியாற்றும் துணை தாசில்தார், வி.ஏ.ஓக்கள் உள்ளிட்ட நூறு பேரை அழைத்து செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் பிரியாணி மற்றும் கறி விருந்து அளித்தார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் குன்றத்தூர் தாசில்தார், அதற்காக விருது பெற்றதை கொண்டாட அந்த விதிகளை காற்றி பறக்கவிட்டது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.