சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவி அத்துமீறி நுழைந்ததுடன், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரையும் கொன்று குவித்தது. இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் படைகள் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள செயற்கைக்கோள்படங்களின் நிலவரப்படி, இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீன ராணுவம் ஊடுருவி உள்ளது.
அந்த பகுதியில், சீனாவின் 16 கூடாரங்கள், தார் சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தது என்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிகிறது. செயற்கைக்கோள் படங்கள் ஒரு தெளிவான ஊடுருவலை காட்டுகிறது.
இந்திய நிலப்பரப்பை சீன ராணுவம் ஆக்கிரமித்தது தொடர்பாக மத்திய அரசு மழுப்பி வரும் நிலையில், இந்த புகைப்பட ஆதாரங்கள் தேசபக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
