ஆபாச பேச்சு – மீரா மிதுனை கைது செய்யக்கோரி புகார்

முன்னணி நடிகர், நடிகைகளை வரம்பு மீறி விமர்சித்த நடிகை மீரா மிதுன் மீது புதுச்சேரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு நடிக்கவே தெரியாது. என் நடிப்பை பார்த்து பொறாமைப்பட்டார். திரிஷா என்னை காப்பி அடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்களை கூறி விளம்பரம் தேடிக் கொண்டவர் தான் மீரா மிதுன்.

பிக் பாஸின் சமீபத்திய சீசனில் பங்கேற்று சில நாட்களில் வெளியேறியவர். இவர் மீது ஏற்கனவே இவரது முன்னாள் காதலர் பண மோசடி குற்றச்சாட்டு கூறியுள்ளார். அழகிப் போட்டி நடத்துவதாக நிறைய தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதாகவும் அடுக்கடுக்காக புகார் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய், சூர்யா மனைவிகள் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் இவர் மீது ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று கலாம் சேவை மையம் சார்பில் வழக்கறிஞர் சம்பத் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x