2025 -ல் புற்றுநோயால் 1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பர்! – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழக்குகள் 12% ஆக அதிகரிக்கக்கூடும். இது 2020 ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக இருந்தது. அதுவே 2025 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனாக அதிகரிக்கும் என்று இந்திய புற்றுநோய் அறிக்கையின் தற்போதைய பாதிப்புகளின் அடிப்படையில் உள்ள தரவுகளின் படி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், புகையிலை தொடர்பான புற்றுநோய்கள் மொத்த பாதிப்பில் 27.1% பங்களிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகமாக இருக்கும். இரைப்பை குடல் மற்றும் மார்பகத்தின் புற்றுநோய்கள் அடுத்ததாக அதிகமாகக் காணப்படுகின்றன.

ஆண்களை பொறுத்தவரை நுரையீரல், வாய், வயிறு மற்றும் உணவுக்குழாய் ஆகியவற்றின் புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவை. பெண்களைப் பொறுத்தவரை, மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் மிகவும் பொதுவானவை.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் பெங்களூரு தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் (என்.சி.டி.ஐ.ஆர்) செவ்வாய்க்கிழமை தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை 2020-ஐ வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை மற்றும் மருத்துவமனை சார்ந்த புற்றுநோய் பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள், இறப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.

ஆண்களில் புற்றுநோய் பாதிப்பு 2020 இல் 6,79,421 ஆகவும், 2025 இல் 7,63,575 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்களில் பாதிப்பு 2020 இல் 7,12,758 ஆகவும், 2025 இல் 8,06,218 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களில் மார்பக புற்றுநோய் 200,000 பேருக்கும் (14.8% பங்களிக்கும்) மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் 75,000 பேருக்கும் (5.4% பங்களிக்கும் ) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், இரைப்பைக் குழாயின் புற்றுநோய் 270,000 பேருக்கும் (19.7% பங்களிக்கும்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“புற்றுநோய் சிகிச்சையானது அண்மை ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுவதால் குணப்படுத்தும் சதவீதமும் அதிகரித்துள்ளது” என சொல்கிறார் மருத்துவர் பி.கே.ஜுல்கா.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x