“ராஜ்யசபாவில் நடந்தது வெட்கக்கேடானது”!!- ராஜ்நாத்சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஞாயிறு) நடந்த வேளாண் மசோதா குறித்து பேசியபொழுது, ராஜ்யசபாவில் நடந்தது கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது, வெட்கக்கேடானது என்று கூறினார். அவர் கூறும்பொழுது குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு ஆகியவை ஒரு போதும் நிறுத்தப்படாது என்று உறுதி அளித்தார்.

இதுபற்றி ராஜ்நாத்சிங் கூறியதாவது:

சபையில் விவாதம் நடத்துவது ஆளும் கட்சியின் பொறுப்பாகும். சபையில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்பது எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.

எம்.பி.க்கள் மீதான நோட்டீஸ்கள் மீது ராஜ்யசபா தலைவர்தான் முடிவெடுப்பார். ராஜ்யசபா விவகாரத்தில் அரசியல் ரீதியாக எதனையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை.

முன்னதாக நேற்று ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்சின் இருக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தையும் கிழித்து எறிந்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேறியது. மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காகும்.

நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விவசாயிகள் விலை பொருட்களை விற்க முடியும் என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x