முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பின் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில்.. அதிர்ச்சியடைந்த போலீசார்..

கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கண்ணாடியை அழுத்தினால் உள்ளே ரகசிய அறை இருப்பதும் அங்கு பாலியல் தொழில் நடப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. அந்த தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த தங்கும் விடுதியில் முழுமையாக சோதனை செய்தனர். அப்போது சுவரில் மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த கண்ணாடியை அழுத்தியபோது அதன் அருகிலிருந்த ரகசிய அறையின் கதவு திறந்தது.

அந்த ரகசிய அறையில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த விடுதியின் காப்பாளர், விடுதி ஊழியர், மற்றும் ஒரு பெண் என 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழைய திரைப்படங்களில் பார்ப்பது போன்று கண்ணாடி பின்னே ரகசிய அறை இருக்கும் தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x