“விநாயகர் சிலைகளை ‘தனிநபர்கள்’ நீர்நிலைகளில் கரைக்கலாம்” சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இலக்கணபதி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் “இது மத உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் விநாயகர் சிலைகளை கூட்டமாக எடுத்துச் செல்லக்கூடாது. ஆனால் தனிநபர்கள் தங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடிய விநாயகர் சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தனர்.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், “அவ்வாறு அனுமதிப்பது சிரமம் என்றும், கட்டுப்பாடுகள் மீறப்படும்” என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள் “நீங்கள் சிறிய கோவில்களை திறந்திருக்கிறீர்கள். அந்த கோவில்களில் 10 ஆயிரம் பேர் கூடினால் என்ன பிரச்சனை ஆகும் என்று  தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்கள். மேலும் மெரினாவில் அனுமதிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் “மெரினாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மெரினாவில் அனுமதித்தால் கூட்டம் அதிகமாகும். மக்களை கட்டுப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிடவில்லை. அதேவேளையில் வீடுகளில் வைத்து பூஜை செய்யக்கூடியவர்கள் சிலைகளை தனியாக எடுத்து சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் மீது அது சம்பந்தமான காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x