மோசமான வானிலையால் இங்கிலாந்து-பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்டும் பாதிப்பு….

சவுதம்டன்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்றேறு விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது பொட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.