குருகிராம்: நேற்றிரவு குருகிராமில் கட்டுமான நிலையில் இருந்த 6 கி.மீ நீள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இருவர் காயமடைந்தனர்.
தேசிய தலைநகர் பகுதியான குருகிராமில் சோனா சாலை என்ற பகுதியில் 6 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டு வந்தது. தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது பாலங்களை பொருத்தி கிட்டத்தட்ட 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்திருந்தன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென இரண்டு தூண்களுக்கு இடையே பொருத்தப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் இரண்டு காயமடைந்தனர். இடிந்து விழுந்த பாலத்திற்கு 10 மீட்டருக்கு அருகே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. நல்வாய்ப்பாக பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குருகிராமில் சில நாட்களாக மழை பெய்து கொண்டிருந்தது. முன்னதாக இரண்டு நாட்கள் பெய்த மழையால் மிகவும் பரபரப்பான சாலை ஒன்றின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. கமிஷன் பெற்றுக் கொண்டு தரமற்ற கட்டுமானங்களை அனுமதித்து மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.
குருகிராம் அமைந்துள்ள ஹரியானா மாநிலத்தில் 2014 முதல் பா.ஜ.க ஆட்சி உள்ளது. 2019-ல் மீண்டும் பா.ஜ.கவே வெற்றி பெற்றது. கடந்த 6 ஆண்டுகளாக மனோகர் லால் கட்டார் என்பவர் ஆட்சி புரிந்து வருகிறார்.
