கொரோனா தனிமை வார்டாகும் ரயில் பெட்டிகள்!

கொரோனா பாதிப்பின் காரணமாக,ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனாவால், தனிமையில் வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ரயில் பெட்டிகளை, தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது இதன்படி ரயில்பெட்டிகள் மருத்துவ வசதிகளுடன் கூடிய தனிமை பெட்டிகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் 20 ஆயிரம் தனிமை ரயில் பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டப்பட்டிருந்தது.

தற்போது 5 ஆயிரம் தனிமை பெட்டிகள் தயார்ப்படுத்தப்பட்டு அவற்றை கிராமப்புறங்களில் பயன்படுத்த அரசின் உத்தரவிற்காக காத்திருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவற்றில் மொத்தம் 80 ஆயிரம் படுக்கைகள் வசதி உள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x