தப்புவாரா அத்வானி…பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு!

அயோத்தியில் பா.ஜ.க., வி.எச்.பி., தொண்டர்களை தூண்டி விட்டு பாபர் மசூதி தகர்க்கப்பட்ட சம்பவத்தில் செப்., 30-ல் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என கிளப்பி விடப்பட்டது. முதலில் மசூதியில் விஷமி ஒருவர் ராமர் சிலையை வைக்க இச்செய்தி காட்டுத் தீ போல் பரவியது. பின்னர் அது ராமர் பிறந்த இடம் என்ற பிரசாரங்கள் பா.ஜ.க., வி.எச்.பி தலைவர்களால் பரப்பப்பட்டன.
இன்றைக்கு அரசியலிலிருந்து ஓரங்கப்பட்டு, எம்.பி., சீட்டு கூட கிடைக்காமல் அப்பாவியாக மோடியை பார்த்து கும்பிட்டு கொண்டிருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இப்பிரசாரத்தில் முக்கிய பங்காற்றியவர்கள்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கத்தியார் உள்பட 32 பேர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியேரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்து 2001ல் உத்தரவிட்டது.
இதற்கு எதிரான வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை செப்.30-க்குள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஆக., 31 வரை காலவகாசம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரம் கேட்டதால் செப்., 30 முடிவு செய்யப்பட்டுள்ளது.