16 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்!! கொலை செய்து உடல் கழிவுநீர் தொட்டியில் மறைப்பு..

மேற்கு வங்கம் மாநிலத்தில் 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள் அவரை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வந்தது தெரிய வந்துள்ளது.

ஜல்பைகுறி மாவட்டத்தின் ராஜ்கஞ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி காணாமல் போனார். சிறுமி காணாமல்போனதை அடுத்து பெற்றோர்கள் புகாரளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்பு கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மறைத்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமி கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்ட இடத்துக்கு போலீஸார் விரைந்தனர்.

பின்பு மூவர் குறிப்பிட்ட இடத்தில் மறைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்பு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x