நாளை ஒரு நாள் கடைகள் அடைப்பு!!!

கடலூர் : 12 கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலை கடைகள் நாளை (புதன்கிழமை) ஒருநாள், கடலூரில் அடைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் அறிவிப்பு செய்துள்ளார்.
முன்னதாக இக்கோரிக்கைகள் தொடர்பாக கடலூரில் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமெனவும் தகவல் வெளிவந்துள்ளது.