கணவனின் இறுதிச்சடங்கில் அழாத மனைவி! விசாரணையில் வெளிவந்த பகீர் கொடூரம்..

புதுடெல்லியை சேர்ந்தவர் கிர்ஷண் (வயது 50). இவர் மனைவி பிரியங்கா. கிர்ஷணை கடந்த 18ஆம் தேதி பிரியங்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிர்ஷண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அங்கிருந்த உறவினர்களிடம் கிர்ஷண், ஃபுட் பாயிசன் (Food Poison) ஆகி உயிர் பிரிந்ததாக பிரியங்கா கூறினார். ஆனால் மருத்துவர்களோ கிர்ஷண் கழுத்தில் காயம் இருப்பதாக கூறினர். இதையடுத்து கணவர் மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, பிரியங்கா பிளேட்டை மாற்றினார்.

இதனால் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பிரியங்கா மீது சந்தேகமடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் தரப்பட்ட நிலையில் பிரியங்காவை அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தனர். எனினும், கிர்ஷணின் மரணத்தை தற்கொலை வழக்காகவே பதிவு செய்தனர்.

இந்நிலையில், இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் கணவனை இழந்த பிரியங்காவோ, ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல், அங்குமிங்கும் ஆக்டிவாக அலைந்து திரிந்ததை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது. இதையடுத்து பிரியங்காவை தனியாக அழைத்து சென்று, போலீசார் தங்கள் பாணியில் கிடுக்குபிடி விசாரணை செய்தனர். அப்போது தனது இரண்டு கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து, கணவரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட உண்மையை பிரியங்கா வெளியே கக்கினார்.

அந்த கொடூர பெண் அளித்த வாக்குமூலத்தில், “ கிர்ஷண் எனது வயதை ஒத்தவர் என நினைத்துதான் நான் அவரை மணந்துகொண்டேன். திருமணத்துக்கு பின்னரே என்னை விட 20 வயது அவருக்கு அதிகம் என தெரியவந்து அதிர்ச்சியடைந்தேன். வயதான கிழவன் என்று என் கணவர் மீது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது.

இளைஞர்களை பார்க்கும்போது அவர்கள் மீது ஆசை தோன்றியது. அந்த சமயத்தில் தான் எனது சகோதரியின் நண்பரான பர்மா என்ற இளைஞருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்தேன். பின்னர் பர்மாவின் சகோதரரான கரண் என்பவருடனும் எனக்கு தொடர்பு ஏற்பட்டது, இதையடுத்து எனது கள்ளக்காதலன் கரணை, என் கூடவே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். இதையடுத்து, அவனை எனது தம்பி என எனது கணவரிடம் பொய் கூறி, என் வீட்டிலேயே தங்கவைத்தேன்.

இந்த சூழலில், எங்கள் இன்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த, கணவர் கிர்ஷணை, நானும் கள்ளக்காதலன்கள் பர்மா, கரண் ஆகியோரும் சேர்ந்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம். அன்றையதினம், மூவரும் சேர்ந்து கிர்ஷனை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டோம்.”

இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளாள்.

இந்த சம்பவத்தில் பிரியங்கா மற்றும் பர்மாவை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்றொரு கள்ளக்காதலன் கரண் தலைமறைவாகி விட்டான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x