இ-பாஸ் டென்ஷன் இனி இல்ல… தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தில், அனைத்து மக்களுக்கும் எந்த வித தடையும் இன்றி இ பாஸ் வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

“ஆதார் அல்லது குடும்ப அட்டை இரண்டில் எதை கொடுத்தேனும் தொடர்பு எண் சேர்த்து கொடுத்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் e-pass வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.”

என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இ பாஸ் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே
பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x