3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆனது…

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது.3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி, 3-ம் நாள் இறுதியில் தனது முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது. கேப்டன் அசார் அலி 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.