அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் பெயரை அக்கட்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் குடியரசு கட்சி தேசிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், இரண்டாவது முறையாக, டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக, மைக் பென்ஸ் ஆகிய இருவரின் பெயரையும், குடியரசு கட்சி தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.