அதிரடியாக குறைந்த தங்க விலை… இதே நிலை நீடிக்குமா?

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக 360 ரூபாய் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 5 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிவை சந்தித்துள்ளது. இது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 7ம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.5416க்கும், சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து, தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.5,048க்கும், சவரன் ரூ.40,384க்கும் விற்கப்பட்டது.

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.4993க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.39,944க்கும் விற்கப்பட்டது. அதே போல் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.39,584க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூ. 45 குறைந்து ரூ.4,948க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் கிராம் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது நகை வாங்குவோரை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “தங்கம் விலை தற்போதைய சூழ்நிலையில் ஒரு நிலையான இடத்தில் இருக்காது. இன்னும் சில நாட்களுக்கு தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் நிலைதான் காணப்படும்” என்றனர். இதனிடையே சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x