பாஜகவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி!

டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனக்குப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று வெளிப்படையாக அறிவித்த அவர், திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகினார். தமிழக அரசியலில் களமிறங்க திட்டம் என்று அப்போதே கூறப்பட்டாலும், அது தொடர்பாக அவர் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன் தன் சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, கிராமப் புறங்களில் மக்களின் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணியில் ஈடுபடப்போவதாகவும், தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாகவும் கூறி வந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை, இன்று டெல்லியில் டெல்லியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன், பொறுப்பாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. பாஜகவால் மட்டுமே அதனை கொடுக்க முடியும். பதவியை எதிர்பார்த்து பாரதிய ஜனதாவில் சேரவில்லை; சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன். பாஜக கட்சியை வலுப்படுத்த என்னால் ஆன உதவிகளை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.