ஆன்லைன் வகுப்புகளை 10% மாணவர்களே பயன்படுத்துகின்றனர்!

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் இணைய வழி கற்றலை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் அதனை பயன்படுத்தும் வசதி 10% பேரிடம் மட்டுமே உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
மும்பையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான தசரா, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது வளரிளம் பருவத்தினரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னென்ன என்று ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் பல குடும்பங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை ஈடுகட்ட மாணவர்களை வேலைக்கு அனுப்பும் சூழல் உருவாகியிருக்கிறது, இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. மேலும், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க 10 முதல் 12% பேரிடம் மட்டுமே போதுமான சாதனங்கள் உள்ளன. சாதனங்கள் இருந்தாலும் 10% பேரிடம் மட்டுமே நிலையான இணைய வசதி உள்ளது. இணைய வழியில் பாடப்புத்தகங்கள் போன்ற மெட்டீரியல்கள் வழங்கப்பட்டாலும் சுயமாகவே மாணவர்கள் கற்க வேண்டியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.