நீட் நுழைவுத் தேர்வு வழிகாட்டுதல்கள் வெளியீடு…வெப்பநிலை 100-க்கு மேல் இருந்தால் தனியறை

நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை கொரானா காலகட்டத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்வுகளை நடத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதனை அறிவிக்கும் வகையில் நுழைவுத்தேர்வு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் முக கவசம், கையுறை, குடிநீர் பாட்டில், சானிடைசர் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அங்கு தரப்படும் மூன்று அடுக்கு கவசங்களை அணிந்துகொண்டு பழைய முகக் கவசத்தை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
தேர்வு அறைக்கு செல்லும் முன் ஒவ்வொரு மாணவரும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவ வேண்டும்.
மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும். அதில் 99.4 பாரன்ஹீட் வெப்பநிலைக்கு மேல் இருப்பவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு வழிகாட்டுதல் களில் கூறப்பட்டுள்ளது. இதில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களை சேர்ந்த மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்களா என்பது குறித்த விளக்கம் இல்லை.