மத்திய அரசுக்கு எதிராக முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட சோனியா, மம்தா முடிவு!!

ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்கள் நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
அரசியல் தலைவர்களும் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை வைத்து உள்ளனர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பல மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை கூட்டி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
பாஜக அல்லாத ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் மராட்டியம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் முதலமைச்சர்களும் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.