இரு குடும்பங்களுக்கிடையே இருந்த பகைக்கு பழி வாங்குவதற்காக 3 வயது பிஞ்சு குழந்தையை ஒருவன் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளான். அவனை கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேசம் பாலியல் பலாத்கார பிரதேசமாக மாறியுள்ளது. பா.ஜ.க அரசு நடந்து வரும் அம்மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் என்பவர் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் தான் கடந்த மாதம் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் வயதான பெண்மணிகள் முதல் குழந்தைகள் வரை பலர் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் அரங்கேறி வருகிறது.
கடந்த 20 நாட்களில் மட்டும் ஒரே மாவட்டத்தில் 3 குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இம்முறை 3 வயது குழந்தை ஒரு மனித மிருகத்தால் உயிரிழந்துள்ளது. கரும்பு தோட்டத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த குழந்தையை பரிசோதித்ததில் பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்து நெறிக்கப்பட்டு கொன்றிருப்பது தெரிந்தது.
போலீசார் விசாரணையில் குழந்தையின் தந்தையுடனான நீண்ட கால குடும்ப பகையால் லேக்ராம் என்பவர் குழந்தையைக் கடத்தி இந்தக் கொடுமையைச் செய்ததாக தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு பா.ஜ.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என காங்., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 2019-ல் மைனர் சிறுமி ஒருவரை உ.பி., பா.ஜ.க எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் என்பவர் பலாத்காரம் செய்ததற்காகவும், அவரது தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்ததற்காகவும் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
