அம்பானியின் பொருள்களை புறக்கணிப்போம்..! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

வேளான் சட்ட மசோதாவை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களது போராட்டங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து அம்பானியின் பொருட்கள் அனைத்தையும் புறக்கணிக்கப்போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அம்பானிக்குச் சொந்தமான ஜியோ,ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலைபேசி சிம்கார்டுகள்,பொட்டி கடையிலிருந்து பெட்ரோல் பங்குகள் வரை அனைத்தையும் புறக்கணிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக டிசம்பர் 12-ஆம் தேதி முதல் சுங்க சாவடி மையங்கள் அனைத்தும் மறிக்கப்படும். சுங்கச்சாவடி வழிகளாக செல்லும் பொதுமக்களின் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் விவசாய சங்கங்கள் அரணாக நிற்கும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேபோல் டிசம்பர் 14ஆம் தேதி அன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்களும் முற்றுகை இடப்படும். இதற்கு தென்னிந்திய விவசாயிகள் சங்கங்களும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.