கலை அறிவியல் அரியர் மாணவர்களுக்கு கவலை இல்லை!

தேர்வு கட்டணம் கட்டிய அரியர் மாணவர்களை தமிழக அரசு ஆல் பாஸ் என அறிவித்தது. இதனால் அரியர் மாணவர்கள் ஆனந்த கூத்தாடினர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியில் பொறியியல் கல்வியை ஒழுங்குபடுத்தும் ஏஐசிடிஇ இடியை இறக்கியது. ஆல் பாஸ் போடுவது தங்கள் கொள்கை கிடையாது. நீங்கள் எடுத்த முடிவை செயல்படுத்த முடியாது என்றது.
ஆனால் ஏஐசிடிஇ விதிகள் படியே ஆல் பாஸ் என அறிவித்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் அந்த மனு விசாரணை வர உள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு நடத்தலாம் என யுஜிசியிடம் கூறியுள்ளது.
இந்த நிலையில் கலை, அறிவியல் அரியர் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஏஐசிடிஇ போல் அரியர் மாணவர்களை பாஸ் போடுவதற்கு எதிராக தங்களுக்கு யுஜிசியிடமிருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வரவில்லை என்றும், அரசு அறிவித்த படி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படும் என்றும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.