5 ரூபாய் கேட்டதால் ஆத்திரம்.. 20 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை..?

மகாராஷ்டிராவில் குழந்தைக்கு இனிப்பு பண்டம் வாங்க 5 ரூபாய் கேட்டதால், 20 மாத குழந்தையை கதவில் அடித்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை.

மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் உயிக். இவர் பிப்ரவரி 2ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, விவேக்கின் மனைவி வர்ஷா, தங்களுடைய 20 மாதக் குழந்தை அழுதுகொண்டே இருப்பதாகக் கூறி காஜா ஸ்வீட் வாங்க 5 ரூபாய் கேட்டிருக்கிறார். ஆனால் தன்னிடம் சில்லறை இல்லை என விவேக் கூறியிருக்கிறார். குழந்தை விடாமல் அடம்பிடித்து அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த விவேக் குழந்தையைத் தூக்கி கதவில் பலமுறை வேகமாக அடித்திருக்கிறார். அதை தடுக்கமுயன்ற வர்ஷாவையும் பிடித்து தள்ளிவிட்டு படிக்கெட்டிலும் இழுத்துச் சென்றிருக்கிறார்.

குழந்தையை விவேக்கிடமிருந்து பறித்த வர்ஷா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு செல்வதற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

கணவரின் கோபத்தால் குழந்தையை இழந்த வர்ஷா, திரோடா காவல்நிலையத்தில் கணவர்மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில் வெறும் 5 ரூபாய் இனிப்புக்காக தன்னுடைய 20 மாத பெண் குழந்தை வைஷ்ணவியை கதவில் பலமாக அடித்ததாகவும், தலையில் அடிபட்டதால் குழந்தை இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விவேக்கை கைதுசெய்த போலீஸார் சொந்த மகளையே கொன்ற கொலைகுற்றத்திற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திரோடா காவல்நிலைய அதிகாரி யோகேஷ் பர்தி கூறுகையில், ‘’இனிப்பு வாங்க கேட்ட 5 ரூபாய்க்காக மனைவியிடம் சண்டையிட்ட விவேக், குழந்தையின் தலையை கதவில் பலமாக அடித்ததால் குழந்தை இறந்துவிட்டது.

2018ஆம் ஆண்டு விவேக் – வர்ஷா திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் மது மற்றும் போதைப்பழக்கத்திற்கு அடிமையான விவேக் தினமும் வர்ஷாவை அடித்து கொடுமைப்படுத்தியதால் ஒரு வருடம் தனது தாயார் வீட்டில் இருந்திருக்கிறார். பின்பு 2019ஆம் ஆண்டுதான் மீண்டும் விவேக் வீட்டிற்கு வந்திருக்கிறார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான விவேக், தன்னுடைய மனைவி வர்ஷா மற்றும் குழந்தை வைஷ்ணவியிடம் மூர்க்கமாக நடந்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x