83.6 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்…ரயில் மூலம் டில்லிக்கு கடத்தி வரப்பட்டது

மியான்மர் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.43 கோடி மதிப்பிலான 504 தங்க பிஸ்கட்டுகளை வருவாய் புலனாய்வு அமைப்பின் டில்லி மண்டல பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

வருவாய் புலனாய்வு அமைப்பின் டில்லி மண்டல பிரிவுக்கு மிகப்பெரிய அளவில் தங்கம் டில்லிக்கு கடத்தி வர இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. அப்போதிலிருந்து ரயில், விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் திப்ருகார் – டில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் போலி ஆதார் கார்டுகளுடன் உடைகளில் தங்கங்களை கடத்தி வந்த 8 பேர் கும்பலை கண்டுபிடித்தனர். அவர்கள் தங்கம் கடத்துவதற்கு என பிரத்யேக உடைகளை தைத்து அதில் 504 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து வந்தது தெரிய வந்தது.

மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக இந்திய எல்லையை தாண்டி இவற்றை இங்கு கொண்டு வந்துள்ளனர். 99.9% சுத்த தங்கமான இவைகள் 83.6 கிலோ எடை கொண்டவை. இதற்காக உள்ளூர் ஆட்களை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இங்கிருந்து கொல்கத்தா, மும்பைக்கு கடத்த திட்டமிட்டுள்ளனர்.

மிகப்பெரிய கடத்தலை டி.ஆர்.ஐ எனப்படும் வருவாய் புலனாய்வு அமைப்பினர் அழித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x