தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1+11 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் குமாரபாளையம் அரசி பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்களுக்கு பதிலாக 1+8 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் .
திருமயம் சாலை அரசு பி . எட் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் உட்பட சில ஆசிரியர்களும் என் . சி . டி . இ விதிமுறைப்படி நியமிக்கப்படாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது . இதனால் இந்த நான்கு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
