ம.பி.யில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை!! மீட்பு பணிகள் தீவிரம்..

மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் சேதுபுரா கிராமத்தில் நேற்று, 3 வயது நிரம்பிய ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்தது.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த பெற்றோர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.