தீபாவளிக்காக தமிழகம் முழுவதும் இன்றுமுதல் இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள்!!

தீபாவளிக்காக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தாண்டுதீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து இன்று முதல் 13 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த 3 நாள்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து, மொத்தம் 9 ஆயிரத்து 510 பேருந்துகளும் சென்னையிலிருந்து புறப்படும்.

பிற நகரங்களிலிருந்து 5247 சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. சென்னையிலிருந்து கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூவிருந்தமல்லி மற்றும் கே.கே.நகர் என 5 மையங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும் . 13 சிறப்பு கவுன்டர்களும் , உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன .

பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை , முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்ப , 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் மொத்தம் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பேருந்துகள் இயக்கம் பற்றி விவரங்களை அறியவும் , புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x