முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா!

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர பிரதான், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளில் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அவருக்கு எந்த அறிகுறியுமற்ற கொரோனா தொற்றே ஏற்பட்டுள்ளதால் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.