பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கென முகநூல் பக்கங்கள்..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கென முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களை சென்னை பெருநகர் காவல் ஆணையர் இன்று துவக்கி வைத்தார்.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கென, பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனைகள் மற்றும் தகவல்களை வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் முகநூல் மற்றும் சுட்டுரை ஆகிய சமூக வலைதள தொடர்பு பக்கத்தை இன்று காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்புப்பிரிவின் துணை ஆணையாளர் எச். ஜெயலஷ்மி உடனிருந்தார்.