பொண்டாட்டி குடிகாரி… அதனால போட்டுத்தள்ளினேன்… கணவனின் சோக கதை
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி. இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் முருகவள்ளி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். வீட்டில் கணவன் மற்றும் குழந்தைகள் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், முருகவள்ளியின் உடலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் கணவன் குழந்தைகளுடன் தலைமறைவாகியது தெரியவந்த நிலையில், ஊரடங்கால் வெளியூருக்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து நடந்தே தப்பி செல்ல முயன்ற சண்முகராஜை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மனைவியின் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், முருகவள்ளிக்கு பக்கத்து வீட்டு பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே மதுவிற்கு அடிமையானவர்கள்.

இவர்கள் மது அருந்தும் போது நட்பின் அடிப்படையில் முருகவள்ளி துவக்கத்தில் சைட் டிஸ் (side dish) சாப்பிட சென்ற நிலையில், பின்னாளில் அழகாக மாற ஒயின் அருந்தலாம் என்று மதுவை அருந்த வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் மூவரும் சேர்ந்து மது அருந்தும் நிலையில், சண்முகராஜ் வருமானம் இல்லாமல் திண்டாடி வந்துள்ளார். மேலும், ரூ.125 மது பானத்தை குடித்து உறங்கினால், கணவன் போதையில் உறங்கியதும் அவரிடம் இருந்து பணத்தை எடுத்து, மூன்று பெண்களும் ஓட்கா வாங்கி அருந்தியுள்ளனர்.

இதுமட்டுமல்லாது, அக்கம் பக்கத்தினரிடமும் பணம் கடனிற்கு வாங்கி மதுபானம் அருந்திய நிலையில், கணவன் – மனைவிக்கிடையே சண்டை எழுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் முருகவள்ளி நீ உறங்கும் போது கல்லை போட்டு கொன்ற விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவன், மனைவி நம்மை கொலை செய்வதற்கு முன்னதாக நாம் அவளை கொலை செய்துவிட வேண்டும் என்ற சிந்தனையில் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
இருவரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவர்கள் என்பதால் மகளின் சடலத்தை கூட வாங்க முடியாது என்று அவளின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனால் காவல்துறையினர் உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். ஒரு பெண் கெட்டுப்போனதால், ஒரு குடும்பமே சீரழிந்து, குழந்தைகள்அனாதையாக ஆகியுள்ளனர்.
மதுபானம் மற்றும் கூடா நட்புகள் மனதிற்கும், உடலுக்கும், வாழ்க்கைக்கும் கேடு என்பதை இருபாலரும் அறிந்து செயல்பட வேண்டும்..