டிக்டாக் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு…

கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த, இந்திய-சீன மோதலின் விளைவாக, இந்திய அரசு, டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஆண்ட்ராய்ட் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது. இதனால் இவற்றை தங்கள் ஸ்மார்ட் போன்களில் இந்தியர்கள் தரவிறக்கம் செய்ய இயலாது. மேலும், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ள சீன செயலிகளையும் முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாங்கள் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என்று, இந்த செயலி நிறுவனங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட செயலி, இந்தியாவில் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, தனிநபர் தகவல்களை எந்த வகையிலும் திருடவில்லை என்று டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட முப்பது லட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள டிக்டாக் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.