தமிழர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!!

சென்னை :

பெரம்பூரில் உள்ள இந்திய ரயில்பெட்டித் தொழிற்சாலையான ICFல் வெல்டர், ஃபிட்டர், எலக்ட்ரீசன், கார்பென்டர், மெக்கானிக்கல் உள்ளிட்ட தொழிற் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலையுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 990 இடங்களுக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்க வரும் 25ஆம் தேதி கடைசி நாளாகும். இது குறித்த கூடுதல் விபரங்களை ஐசிஎஃப் இணையதளத்தில் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

 குறிப்பாக, இப்பயிற்சியிக்கு தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே பணியிடங்களில் தமிழ்நாட்டினருக்கான பணிவாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு வரும் நிலையில் ஐசிஎஃப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்,https://pbicf.in. என்ற லிங்க்குள் சென்று விண்ணப்பிக்கவும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x