பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினார்கள்!!!

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு, ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிட்காயின் எனப்படும் ‘டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி’பணப் பரிவர்த்தனை மோசடி குழுவே, மோடியின் டுவிட்டர் கணக்கை முடக்கியதன் பின்னணியில் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் படியும் அந்த கும்பல் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் ஹேக்கிங்கை உறுதிப்படுத்திய ட்விட்டர், இந்த செயல்பாடு குறித்து அறிந்திருப்பதாகவும், ஹேக் செய்யப்பட்ட கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. “நாங்கள் நிலைமையை தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

“கோவிட் -19 க்கான பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன், இப்போது கிரிப்டோ நாணயத்துடன் இந்தியா தொடங்குகிறது. நன்கொடை அளிக்கவும். ” என்று மோடியின் கணக்கில் ஹேக்கர்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும், “மோடியின் இந்த கணக்கை ஜான் விக் hckindia@tutanota.com) ஹேக் செய்துள்ளார். ஆனால், நாங்கள் Paytmஐ ஹேக் செய்யவில்லை” என்றும் இன்னொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, கிரிப்டோகரன்ஸி நிவாரணத்தை கோரும் அந்த ட்வீட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கில் 25 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

ஆகஸ்ட் 30 அன்று, பேடிஎம்மின்(Paytm) ஈ-காமர்ஸ் பிரிவான பேடிஎம் மால் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தகவல் திருட்டு தாக்குதலுக்கு பின்னால், மோடியின் கணக்கு மீது தாக்குதல் நடத்திய ஜான் விக் என்ற ஹேக்கர் குழுவே இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் சைபிள் கூறியுள்ளது.

கடந்த ஜூலையில் , வாரன் பபெட், ஜெஃப் பெசோஸ், பராக் ஒபாமா, ஜோ பிடென், பில் கேட்ஸ் மற்றும் எலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களின் பல ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதன் வரிசையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனிநபர் மட்டுமல்லாது, உபெர் மற்றும் ஆப்பிள் நிறுவன நிறுவனங்களின் கணக்குகளும் ஹேக்கர் குழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே, பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்ததில் சூத்திரதாரி என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x