அதிகாலை அவசர திருமணம்; தூக்கில் தொங்கிய மாப்பிளை!

இலங்கையில், இன்று அதிகாலையில் திருமணம் செய்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டியை அடுத்த கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனுக்கு, இன்று அதிகாலை 3 மணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் அவனது குடும்பத்தினர்.
அதன் பின்னர் அந்த இளைஞன் காலை 9 மணிக்கு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு, 18 வயது பெண்ணுடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் கர்ப்பமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை அறிந்த நிலையிலேயே, அவசரம் அவசரமாக அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர் குடும்பத்தினர். இவ்வாறு திருமணம் செய்து வைத்ததால் மனவருத்தமடைந்த இளைஞன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளான்.
சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.