உலகின் புதுமையான பொருளாதாரங்கள் – முதல் முறையாக 50 இடத்திற்குள் வந்த இந்தியா!

உலகின் புதுமையான பொருளாதாரங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 4 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 50 இடத்திற்குள் வந்துள்ளது.

உலக அறிவுசார் சொத்து நிறுவனம் ஆண்டுதோறும் உலக புதுமை குறியீடு என்ற ஒன்றை வெளியிடுகிறது. உலக நாடுகளை அதன் புதுமையான நடவடிக்கைகள், சூழல்கள் மற்றும் விளைவுகள் ஆகியவற்றை கொண்டு இதில் தரவரிசைப் படுத்துகின்றனர். இந்த குறியீடு 131 நாடுகளின் பொருளாதார பலங்கள், பலவீனங்களை அலசுகிறது. புதன்கிழமை வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான குறியீட்டில் இந்தியா முதல் முறையாக 50 நாடுகளுக்குள் இடம்பிடித்துள்ளது.

மத்திய மற்றும் தெற்காசியா பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தைப் இந்தியா பிடித்துள்ளது. மேலும் 2019-ல் இருந்ததை விட நான்கு இடங்கள் முன்னேறி இந்தியா உலகின் மூன்றாவது மிக புதுமையான குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரமாக மாறியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.டி., சேவைகள் ஏற்றுமதி, அரசு ஆன்லைன் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் எண்ணிக்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்ற அளவீடுகளில் இந்தியா முதல் 15 இடங்களில் உள்ளது. மும்பை, டில்லியில் உள்ள ஐ.ஐ.டிக்களின் முன்னேற்றம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் அதன் சிறந்த வெளியீடுகள் காரணமாக, நடுத்தர வருவாய் பொருளாதாரத்தில், இந்தியா உயர்ந்த புதுமை தரம் கொண்டதாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்வீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவை உள்ளன. சீனா 14-வது இடத்தில் உள்ளது. ஜி.ஐ.ஐ., குறியீட்டில் முதல் 30 நாடுகளில் இடம்பெற்றுள்ள ஒரே நடுத்தர வருமான கொண்ட நாடு சீனாவாகும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x