மகாராஷ்டிராவில், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

​மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 9,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 298 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,00,651 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 14,463 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், மகாராஷ்டிரத்தில் இதுவரை மொத்தம் 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 1,46,129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு குணமடைவோர் விகிதம் 59.84 சதவிகிதமாக உள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 2 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,545 ஆக உயர்ந்துள்ளது. எனினும், 83 பேர் மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x