இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதள பாதாளத்திற்கு சென்றது… மோடி உயிருக்கு ஆபத்து!

இவை இரண்டும் வெவ்வேறு செய்திகள். எப்பொழுதெல்லாம் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறதோ, பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் ஆங்கில ஊடகங்கள் “மோடி உயிருக்கு ஆபத்து! ஆதாரம் சிக்கியது” என வாங்கிய காசுக்கு கூவ தொடங்கிவிடுவார்கள்.

தற்போதும் அதே வேலையை, மோடியை வெளிப்படையாக ஆதரித்து வரும் ஆங்கில செய்தி சேனல் ஒன்று செய்துள்ளது. மோடியின் உயிருக்கு பயங்கர ஆபத்து இருப்பதாகவும், அவரை கொல்ல சொல்லி இமெயில் ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு சதி என்றும் கதறியிருக்கிறது.

ஆனால் அதனை நம்புவதற்கு யாரும் தயாராகயில்லை என்பது அத்தொலைக்காட்சி டுவிட்டர் கணக்கில் வரும் பின்னூட்டத்தின் மூலமே அறிந்துகொள்ளலாம். ஒருவர் இப்படி பின்னூட்டமிட்டிருக்கிறார். “புல்வாமாவில் 40 வீரர்கள் துண்டு துண்டாக சிதறிய போது, ஆர்டிஎக்ஸ் பற்றி என்ற உளவு தகவலும் இல்லை, கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட போது எந்த உளவு தகவலும் இல்லை, ஆனால் தற்போது ஜிடிபி மைனஸ் 23.9% சென்ற உடன் உளவு பிரிவினர் செயல்பட தொடங்கிவிட்டனர். மோடி உயிருக்கு ஆபத்து என்று” இவ்வாறு கூறியுள்ளார்.

மற்றொருவர் “ஊரடங்கினால் வீட்டிலேயே இருந்து கொண்டு மயிலுக்கும், வாத்துக்கும் இரை வைப்பவருக்கு எப்படி ஆபத்து ஏற்படும். மயில், வாத்துக்களை விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x