எப்போதும் தயாராக இருங்கள்: ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

எந்த சூழலையும் சமாளிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று, ஐ.பி.எஸ்., பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள, சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐ.பி.எஸ்., பயிற்சி முடித்த அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:
வழக்கமாக, ஐ.பி.எஸ்., பயிற்சி முடித்த அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுவேன். ஆனால் தற்போது, கொரோனா தொற்று காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எந்த சூழலையும் சமாளிக்க எப்போதும் தயாராக இருங்கள்.
யோகா மற்றும் பிரணாயாமம் மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவும் . மனதிலிருந்து செய்யும் செயலுக்கு நிச்சயம் பலனுண்டு. பதவிக்காலம் முடிவதற்குள், பயிற்சி முடித்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளை நிச்சயம் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.