ஐ.பி.எல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்! அடுத்தடுத்த அதிர்ச்சியில் சென்னை அணி!

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 13-வது சீசன் தொடரில் இருந்து சி.எஸ்.கே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக சி.எஸ்.கே நிர்வாகத்திடம் ஹர்பஜன் விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, இந்தியாவில் அவரது நெருங்கிய உறவினர்கள் தாக்கி கொல்லப்பட்டதின் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் ஹர்பஜனின் முடிவு அணியை மேலும் பலவீனமாக்கியுள்ளது.

வரும் 19ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை ஆணை மும்பை அணியை எதிர்கொள்கிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x