அரியர் மாணவர்களுக்கு அடுத்த இடி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இருபது, முப்பது அரியர்களுடன் கடமைக்கு கல்லூரி சென்று வந்தவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆல் பாஸ் என்று அறிவித்தார். அவரின் இம்முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.


அதேபோன்று கல்லூரி தேர்வகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வைத் தவிர மற்ற கல்லூரி தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், அரியர்ஸ் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்தது.

நோகாமல் நோன்பு கும்பிடும் மாணவர்களுக்கு இது இனிப்பாக இருந்தது. ஆனால் படித்து அனைத்து பேப்பர்களையும் தேர்ச்சி செய்தவர்களுக்கே நிறுவனங்கள் பெப்பே காட்டிவிடுகின்றன. கொரோனா கால மாணவர்கள் என்றாலே இனி வேலைக்கு எடுக்க போவதில்லை என கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதற்கிடையில் அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இதற்கிடையில் விரும்பினால் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x