“கொரோனா ஒரு உலக பேரிடர் மட்டுமே.. மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல” – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்று, மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நோய் எக்ஸ் மனித குலத்துக்கு மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது மிகப்பெரிய தொற்று நோயை ஏற்படுத்தக்கூடிய அறியப்படாத நோய்க்கிருமிகளை கொண்டது என 2018-ல் உலக சுகாதார அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவிய போதும், நோய் எக்ஸ் வந்துவிட்டதோ என்றுதான் சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கொரோனா ஒரு உலக பேரிடர், ஆனால் நோய் எக்ஸ் அல்ல’ என்று கூறினார்.

கொரோனா தொற்று உலக அளவில் பரவிவரும் ஒரு வைரஸ் என்றாலும், இது மனித குலத்தை அழிக்கும் கொடிய நோய் அல்ல என்று கூறிய லூங், எதிர்கால தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கு தற்போதைய நெருக்கடி நிலையின் பாடங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 56,908 ஆக உள்ள நிலையில், இதுவரை 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x