செப்.10 ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் திறப்பு உண்மையா??

பள்ளிகள் திறப்பு பற்றி வதந்திகள் பரவி வரும் நிலையில்,அது குறித்து என்னதான் முடிவு என்பதை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!
உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் கணக்கிடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
தற்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் மாணவர்களுக்கு பாட வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.