ஜி.டி.பி., வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி.,யே காரணம்: மத்திய அரசை சாடிய ராகுல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரலாறு காணாத வீழ்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பே காரணம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவு:

நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையில் சென்றதற்கு மோடி அரசு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி.,யே மற்றொரு காரண. இது ஏராளமானவற்றை அழித்துவிட்டது. லட்சக்கணக்கான சிறு வணிகம்; கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலைவாய்ப்பு; மாநிலங்களின் பொருளாதார நிலைமை; ஜி.எஸ்.டி., என்றால் பொருளாதார பேரழிவு.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுடன், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

பா.ஜ.க.,வின் ஜி.எஸ்.டி., முற்றிலும் வித்தியாசமானது. புரிந்து கொள்ள முடியாதது. அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் ஜி.எஸ்.டி. அனைவரும் ஒருங்கிணைந்து, ஜி.எஸ்.டி.,க்கு எதிராக போராட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x